விதியோடு கூட மோது; விஜய்யுடன் மோதாதே; சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!
Jana Nayagan vs Parasakthi Movie : சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வரும் 10ஆம் தேதி வெளியாகும் நிலையில் நடிகர் கூல் சுரேஷ் அது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

Jana Nayagan vs Parasakthi Release
விஜய்யின் ஜன நாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று தான். இதே போன்று தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு படத்தை முன் கூட்டியே வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Jana Nayagan vs Parasakthi
பொதுவான பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய நட்சத்திரங்களின் படங்களின் திரைக்கு வருவது இயல்பு தான். ஒரு சில நேரங்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் கூட வெளியிடப்படும். ஆனால், இங்கு அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஜன நாயகன்:
ஜன நாயகன் இது தளபதி விஜய்க்கு கடைசி படம், வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் அதிக் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு மற்றும் செல்ல மகள் ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா இல்லை இல்லை ஜன நாயகன் திருவிழா மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.
பராசக்தி:
அதே போன்று தான் ஜனவரி 10ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், என்னவென்றால் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதே போன்று திரையரங்குகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படியிருக்கும் போது பராசக்தி படத்தை வெளியிட்டால் எப்படி திரையரங்கள் கிடைக்கும். இந்தப் படம் திருட்டு கதை பிரச்சனையில் சிக்கியதோடு சென்சார்களும் அதிக இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல பிரச்சனைகளை எதிர்கொண்ட பராசக்தி படம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
கூல் சுரேஷின் ஆவேசம்:
பலரும் "பராசக்தி இருந்தாலும் ஓம் சக்தியாக இருந்தாலும் என் அண்ணன் சக்திக்கு ஆடி தூசிக்கு சமம்." என்றெல்லாம் சிவகார்த்திகேயனை சரமாரியாக கேள்வி எழுப்பு வருகின்றனர்.
கூல் சுரேஷின் ஆவேசம்:
விஜய் சார் கூட தான் சிவகார்த்திகேயன் மோதனுமா விதியோடு கூட மோது விஜய் சார் கூட மோதாதே சிவகார்த்திகேயன் என்று அதிரடியாக பேசியுள்ளார் கூல் சுரேஷ் விஜய் சார் நானும் அவரும் அண்ணன் தம்பி மாதிரி. ஏன் இவரு இவ்வளவு அவசரப்படுறாரு ஏன் கொஞ்ச நாள் கழிச்சு வெளியிட்ட இவருக்கு ஆகாதா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் கூல் சுரேஷ்.
சிவாக்கு இவ்வளவு அவசரம்:
சிவகார்த்திகேயன் என் நண்பர் தான் அவருக்கே இவ்வளவு அவசரம் விஜய் சார் கூட தான் மோதனுமா விஜய் சார் படம் வரும்போகுது உனக்கு தியேட்டர் கிடைக்காது, நீ ஏன் இவரோட போட்டி போடுற. ஒரு வாரம் இல்லைனா பத்து நாள் கழிச்சு அந்த படத்தை ரிலீஸ் பண்ண என்ன ஆகப்போகுது? இந்த தியேட்டர் கிடைக்காத நிலைமைல இதெல்லாம் தேவையா சிவா என்று ஒரு நேர்காணலில் கூல் சுரேஷ் ஆவேசமாக கூறியுள்ளார்.
சிவாவை தாக்கியுள்ளார் கூல் சுரேஷ்:
தயாரிப்பாளர் ஓட கஷ்டத்தை புரிஞ்சுக்கோங்க சிவா உங்களை நம்பி தானே பணத்தை போட்டு இருக்காங்க தயாரிப்பாளர்களோட கஷ்டம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா? என்றெல்லாம் சரா மாறியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நானும் விஜய் சாரும் அண்ணன் தம்பி மாதிரி பழகி வரும் எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் இவர் படத்தின் மூலம் தான் வந்தது அவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலமே கூல் சுரேஷ்னு போட்டாங்க எனக்கு நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர் அவர் படம் கண்டிப்பாக வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.