- Home
- Cinema
- ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடியை நெருங்கிய வசூல்... ‘மாவீரன்’ சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கியது யார் தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடியை நெருங்கிய வசூல்... ‘மாவீரன்’ சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கியது யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது யார் என்கிற அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர்.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சமீபத்தில் சுமார் 500 உள்ளூர் நடனக் கலைஞர்கள் இடம்பெற்ற முதல் சிங்கிளான- ‘சீன் ஆ சீன் ஆ' என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்பாடலை மோகோபாட் என்கிற அதிநவீன கேமரா மூலம் படமாக்கி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸும், தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்டும் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கும் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியுடன் படப்பிடிப்பை முடிக்கும் தருவாயில் படக்குழு உள்ளனர். இன்னும் சில வாரங்களில் இப்பட ஷூட்டிங் முடிய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... 4-வது திருமணம் முடிந்த கையோடு... 44 வயது நடிகையுடன் ஹனிமூன் சென்ற 60 வயது நடிகர்...! வைரலாகும் போட்டோஸ்
மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க மேலும், நடிகர்கள் யோகி பாபு மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுமட்டுமல்லாது, படத்தில் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவீரன் படம் ரிலீசுக்கு முன்னரே ரூ.83 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்து வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய பிலோமின் ராஜ் தான் மாவீரன் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 'மாவீரன்' படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ், நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சரித்திரம் படைக்குமா RRR? நாளை ஆஸ்கர் விழா... இந்தியாவில் நேரலையில் எப்போது? எப்படி பார்க்கலாம்? - முழு விவரம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.