- Home
- Cinema
- Valimai ticket :அட்ராசக்க இந்த ஆஃபர் நல்லா இருக்கே! மளிகை பொருள் வாங்குனா ‘வலிமை’ டிக்கெட் இலவசமாம்- இது எங்க?
Valimai ticket :அட்ராசக்க இந்த ஆஃபர் நல்லா இருக்கே! மளிகை பொருள் வாங்குனா ‘வலிமை’ டிக்கெட் இலவசமாம்- இது எங்க?
வலிமை படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி உள்ளதால், திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
வலிமை (Valimai) படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி உள்ளதால், திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் முழுவதுமாக விற்றுத்தீர்ந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வலிமை படத்தின் டிக்கெட் இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி (SIMCO) மையத்தில் ரூ. 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்கினால் வலிமை (Valimai) படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டிக்கெட்டின் மதிப்பு ரூ.500 இருக்குமாம். இதில் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.