கிழிந்த பேண்டில்... செம்ம ஸ்டைலிஷாக புகைப்படங்கள் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறிய சிம்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் செம்ம பிஸியாக நடித்து வரும் சிம்பு, ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு அப்துல் காலிக் என பெயரிடப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமெடுத்து வருகிறது. மாநாடு படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அவ்வப்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு, படக்குழுவினர் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தரன்னுடைய ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு, சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு... தமிழ் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் புது பொலிவையும், புது நம்பிக்கையையும், புது உற்சாகத்தையும் அளிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.