காதல் கணவருடன் கல்யாண புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு பட நடிகை... திடீர் திருமணத்திற்கான காரணம் இதுதான்...!

First Published Nov 25, 2020, 10:37 AM IST

என்ன இது சேவை செய்யப்போகிறேன் எனக்கூறிவிட்டு, இப்படி திருமணம் செய்து கொண்டாரே என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சனா கான். அதன் பின்னர் தமிழில் பயணம், ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சனா கான் திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சனா கான், இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய உண்மையான நோக்கம் பணத்தையும், புகழையும் துரத்துவதற்குத்தானா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு, வறியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அந்த வாழ்க்கை கடமையில் ஒரு அங்கம் இல்லையா?.

ஒரு நபர், தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட காலமாக நான் பதில் தேடி வருகிறேன்.

அதுவும் குறிப்பாக என் மரணத்துக்குப் பின் எனக்கு என்ன ஆகும் என்கிற கேள்விக்கு. எனது மதத்தில் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.

எனவே படைத்தவனின் ஆணைக்கு இணங்க மனிதனின் பாவட்ட வாழ்க்கையை தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.

இந்நிலையில் திடீரென கடந்த 20ம் தேதி சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சனாகான் திருமணம் செய்து கொண்டார். என்ன இது சேவை செய்யப்போகிறேன் எனக்கூறிவிட்டு, இப்படி திருமணம் செய்து கொண்டாரே என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்கான காரணத்துடன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

அல்லாவுக்காக ஒருவரையொருவர் காதலித்தோம். அல்லாவுக்காக திருமணம் செய்து கொண்டுள்ளோம். இந்த வாழ்க்கையில் அல்லா எங்களை ஒன்றாக வைத்திருந்து மறுமையிலும் ஒன்று சேர்க்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?