- Home
- Cinema
- shruti hassan : அந்த இடத்தில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன் - ஓப்பனாக சொன்ன சுருதிஹாசன்
shruti hassan : அந்த இடத்தில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன் - ஓப்பனாக சொன்ன சுருதிஹாசன்
shruti hassan : சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுருதி ஹாசன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சுருதி. இதுதவிர கோபிசந்த் மாலினேனி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சுருதி.
நடிகை சுருதி ஹாசன், லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்ற நாடகக் கலைஞரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கட்ந்த 2019ம் ஆண்டு பிரேக் அப் செய்து பிரிந்தனர். வெவ்வேறு நாட்டில் இருப்பதால் தங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது நடிகை சுருதி ஹாசன் டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த டூடுல் கலைப் போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருவரும் மும்பையில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுருதி ஹாசன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் உடம்பில் எத்தனை பாகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு கோபத்துடன் பதிலளித்த சுருதி, இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் இருந்தாலும் சொல்றேன்... மூக்கில் மட்டும் என கூறினார்.
இதையும் படியுங்கள்... RRR : பார்ப்பவர்களுக்கு தேசபக்தி கனலை உணரவைக்கிறது ஆர்.ஆர்.ஆர் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகழாரம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.