அட கடவுளே... கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி சக்தி! வெளியான அதிர்ச்சி தகவல்!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான சக்தி, சமீபத்தில் தான் புதிய கார் ஒன்றை வாங்கிய நிலையில், அவருடைய கார் விபத்தில் சிக்கி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக பல ரசிகர்களால் அதிகம் ரசித்து பார்க்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று, வெள்ளித்திரையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை இந்த நிகழ்ச்சி பெற்று வருவதால், தமிழ் திரையுலகில் வாய்ப்பு தேடும் பல இளம் நடிகர்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். குக்குகளை போலவே கோமாளிகளுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் பிளே பாய்யாக வலம் வந்த 6 நடிகர்கள் யார் யார் தெரியுமா?
அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் புகழ், பாலா, தங்கதுரை, ஷிவாங்கி போன்ற பலர் இன்று வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களாக மாறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோமாளிகளில் ஒருவர் சக்தி. முதல் மூன்று சீசன்களில் அதிக எபிசோடுகளில் கலந்து கொண்ட இவர், இந்த சீசனில் மிகவும் குறைவான எபிசோடுகளில் மட்டுமே அவ்வபோது வந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ள நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் புதிய கார் ஒன்றை வாங்கினார். கார் வாங்கி ஆறு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது இவருடைய கார் விபத்தில் சிக்கி உள்ளதாக அவரே கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சக்தி சென்னை சென்ட்ரல் அருகே காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவரது காரை ஒரு பேருந்து உரசியபடி வந்து இடித்து சென்றுள்ளது. இதில் சக்தியின் தலையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும்... ஆனால் காருக்கு தான் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பலர் சக்தி குறித்து தொடர்ந்து நலம் விசாரிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.