குறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!
Shah Rukh Khan Advice to his Daughter : ‘நீங்க அவனைப் பத்தி எதுவும் சொல்லவும் மாட்டீங்க, எனக்கு மட்டும் ஏன் அது இதுன்னு பேசுறீங்க? என் மேல மட்டும் ஏன் உங்க கவனம், எச்சரிக்கை?’ என்று கேட்டார். அதற்கு ஷாருக் கான் என்ன சொன்னார் பார்க்கலாம்.

ஷாருக்கான்
பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் (Shah Rukh Khan) பற்றிய ஒரு செய்தி இப்போது செம வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த சினிமா செய்தியும் அல்ல. மாறாக இது பர்சனல்... அதுவும் மிகவும் பர்சனல், அதாவது இது அவரது குடும்பம் சம்பந்தப்பட்டது. இதை யார் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த கதை வைரலாவது உண்மை.
சுஹானா கான்
ஆம், சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தியின்படி, ஒருநாள் ஷாருக்கான் மகள் சுஹானா கான் (Suhana Khan) மிகவும் குறைந்த ஆடை அணிந்து வீட்டை விட்டு வெளியே கிளம்பினார். அதைப் பார்த்த சுஹானாவின் தந்தை, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், 'மகளே, ஏன் இவ்வளவு குறைந்த ஆடை அணிந்து வெளியே செல்கிறாய்?' என்றார். இதைக் கேட்டு சுஹானாவிற்கு கடும் கோபம் வந்தது.
சுஹானா கான் கடும் கோபம்
சுஹானா கான் கடும் கோபத்துடன் தந்தை ஷாருக்கிடம், 'அப்பா.. ஆர்யன் கானும் (Aryan Khan) குறைந்த ஆடை அணிந்து எல்லா இடங்களுக்கும் செல்கிறான்.. அவனும் பார்ட்டிக்கு போகிறான். ஆனால் நீங்கள் அவனை எதுவும் சொல்வதில்லை. எனக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? என் மீது மட்டும் ஏன் இவ்வளவு கவனம், எச்சரிக்கை? எனக் கேட்டார். அதற்கு ஷாருக்கான் கூலாக பதிலளித்தார்.
ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா
ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா? 'மகளே, எந்த உலோகத்தையும் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஏனென்றால், அதற்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், தங்கத்தை பத்திரமாக பெட்டகத்தில் வைப்பார்கள். ஏனெனில் அது மிகவும் விலை உயர்ந்தது' என்றாராம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த உரையாடல் உண்மையா என்பது தெரியவில்லை.
ஷாருக்கான் பதில்
சமூக வலைதளங்களில் ஷாருக்கானின் பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர். 'ஷாருக்கான் சும்மாவா!' என்கிறார்கள். ஆனால், இந்த வைரல் செய்தி உண்மையா? என்பது குறித்து தெளிவு இல்லை.