VJ Chitra :ஹேம்நாத்தை யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்ருனு சொன்னேன், அவ கேட்கல- சித்ராவின் தோழி வெளியிட்ட பகீர் தகவல்
VJ Chitra : விஜே சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான ரேகா நாயர், சித்ரா குறித்தும், அவரது கண்வர் ஹேம்நாத் குறித்தும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அருகே உள்ள நசரத்பேட்டையில் அமைந்து விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இந்த விபரீத முடிவுக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
சித்ரா தற்கொலை வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஹேம்நாத், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். வெளியே வந்ததும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த புகாருக்கு பின் இந்த வ்ழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
விஜே சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான ரேகா நாயர், சித்ரா குறித்தும், அவரது கண்வர் ஹேம்நாத் குறித்தும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், பெண்கள் விஷயத்தில் ஹேம்நாத் எப்படிப்பட்டவன் என தெரிந்ததும், அவனை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டிருனு சித்ராவுக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதனை அவள் கேட்கவில்லை என்றும் ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர ஹேம்நாத் பல்வேறு பெண்களை இதுபோன்று ஏமாத்தி உள்ளதாக தெரிவித்துள்ள ரேகா நாயர், அவரால் ஒரு தொகுப்பாளினி ஒருவர் கர்ப்பமாகி பின்னர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி உள்ளார். இவ்வாறு சித்ரா மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை நடிகை ரேகா நாயர் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாலிவுட்டில் சுஷாந்துக்கு நடந்த கொடுமை... தமிழில் சிவகார்த்திகேயனுக்கும் நடந்துச்சு - பகீர் கிளப்பிய பிரபலம்