- Home
- Cinema
- Rachitha Mahalakshmi : இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை ரச்சிதா... மாப்ள யார் தெரியுமா?
Rachitha Mahalakshmi : இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை ரச்சிதா... மாப்ள யார் தெரியுமா?
Rachitha Mahalakshmi : நடிகை ரச்சிதா மகாலட்சுமி விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதையடுத்து புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பாப்புலர் ஆன இவர், கடந்த 2015-ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார் ரச்சிதா. குறிப்பாக அவர் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்கிற சீரியலில் நடித்தபோது இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை ரச்சிதா, விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சொல்ல மறந்த கதை என்கிற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் ரச்சிதா, அந்த சீரியல் கேரக்டர் தன் சொந்த வாழ்வோடு ஒத்துப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் அவர். இந்நிலையில், நடிகை ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
தற்போது அவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ரச்சிதா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த இயக்குனர் யார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகை ரச்சிதா தினேஷையும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உள்ளாடை போடாமல்... சட்டை பட்டனை கழட்டிவிட்டு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கதிகலங்க வைத்த பூஜா ஹெக்டே
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.