- Home
- Cinema
- Neelima Esai Pregnancy Photos: நிறைமாத வயிற்றோடு எலிசபெத் ராணியாகவே மாறி.. நீலிமா எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்!
Neelima Esai Pregnancy Photos: நிறைமாத வயிற்றோடு எலிசபெத் ராணியாகவே மாறி.. நீலிமா எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா ராணி (Neelima Rani), தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், எலிசபெத் ராணிபோல் (Elizabeth Princess) மிகவும் வித்தியாசமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, ரசிகர்களை அசர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சமீப காலமாக சீரியல் நடிகைகளும் ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா இசை மகாராணி தோற்றத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இவை...
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.
கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.
சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நீலிமாவை யாரும் மறந்திருக்க முடியாது.
இவருக்கு திருமணம் ஆகி, ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில்... தற்போது இரண்டாவது முறையாக கற்பமாகியுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், அனைத்து சீரியல்களில் இருந்தும் விலகி தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
ஏற்கனவே மிகவும் வித்தியாசமாக Pregnancy போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை வியக்க வைத்த நீலிமா இசை தற்போது எலிசபெத் மகாராணி தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்...
கோல்டன் மற்றும் டார்க் பிங்க் நிற லாங் சல்வாரில்... கழுத்தில் அழகிய வெள்ளை நிற கல் வைத்த ஜோக்கர் அணிந்து போஸ் தேவதை போல் ஜொலிக்கிறார்.
குறிப்பாக இந்த புகைப்படத்தில், வெள்ளை நிற ஸ்காஃப் ஒன்று அணிந்திருப்பது வேற லெவல் அழகு... இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.