காருக்குள் கட்டாயப்படுத்தி அரை நிர்வாண வீிடியோ... காதலனால் சின்னத்திரை நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை...!
தன்னை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வரும் காதலனுடன் சேர்ந்து முன்னாள் கணவர் தனக்கு செய்து வரும் தொல்லைகள் குறித்து சீரியல் நடிகை ஜெனிபர் பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் துணை நடிகையாக நடித்து வருபவர் ஜெனிபர். இவருக்கும் சரவணன் என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனிடையே ஜெனிபருக்கும், அவர் நடித்து வரும் சீரியலில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நவீன் குமார் என்பவருக்குமிடையே உருவான பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களுடைய காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியும் என்பதால், இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இடையில் நவீன் குமாருக்கு வேலை இல்லாமல் போக ஜெனிபரை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அடிக்கடி அவரை அடித்து சித்ரவதை செய்தும் வந்துள்ளார்.
ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் ஜெனிபரை காரையில் அழைத்துச் சென்ற நவீன் குமார். விடியற்காலை 4.30 மணி வரை ஊர் முழுவதும் சுற்றியுள்ளார். அப்போது காரிலேயே அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அவருடைய மேலாடையைக் கிழித்து அரை நிர்வணமாக்கிய நவீன் குமார், அவரை அந்த கோலத்திலேயே தன்னுடைய போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார். நீ எனக்கு பணம் தர மறுத்தால் இவை அனைத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.
அடிக்கடி ஜெனிபரை நவீன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்தால் அரை நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜெனிபர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நவீன் குமாரின் தந்தை காவல்துறையில் பணியாற்றுவதால் அவர் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் சரவணனும், காதலன் நவீன் உடன் சேர்ந்து கொண்டு தன்னையும், தன்னுடைய பெற்றோர்களையும் மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.