- Home
- Cinema
- Serial Actress Shabana: திருமணம் ஆன ஒரே மாதத்தில் ஆர்யன் - ஷபானா விவாகரத்தா? தீயாய் பரவும் காரணங்கள்!
Serial Actress Shabana: திருமணம் ஆன ஒரே மாதத்தில் ஆர்யன் - ஷபானா விவாகரத்தா? தீயாய் பரவும் காரணங்கள்!
கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்யன் - ஷபானா தம்பதி, திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிய உள்ளதாக பரவி வரும் தகவல் அவர்களது ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் சில சீரியல்கள் மட்டுமே இல்லத்தரசிகள் மனதை அதிகம் கவரும் அந்த வகையில், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று 'செம்பருத்தி'.
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷபானா. இந்நிலையில் இவருடைய காதல் விவகாரம் குறித்து ஏற்கனவே, பல தகவல்கள் கசிந்த நிலையில், ஒரு நிலையில் அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் டிவி 'பாக்யலட்சுமி' சீரியல் நடிகரை காதலித்ததை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் திடீர் என்று, கடந்த மாதம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு அரை மனதோடு ஆர்யன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் , ஷபானா வீட்டில் தொடர்ந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், பெற்றோரை மீறி ஷபானா ஆர்யனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம்... அவர்களின் நண்பர்கள் சப்போர்ட்டோடு மிகவும் எளிமையாகவே நடந்தது.
தற்போது ஆர்யன் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக சில வதந்திகள் பரவி வருகிறது. எனவே இருவரும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து பெரும் முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவ துவங்கியுள்ளது.
அதே நேரத்தில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்துள்ளது ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.
ஷபானா - ஆர்யன் விவாகரத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும், விரைவில் இருவரும் பிரிவு பற்றிய வதந்தி குறித்து விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.