இயக்குனர் ஷங்கர் இந்த 4 பாட்டு இல்லாம படமே எடுத்ததில்லையாம்! இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அனைத்து படங்களிலும் ஒரே டெம்பிளேட் பாடல்களை பயன்படுத்தி இருப்பது பற்றி பார்க்கலாம்.
Director Shankar Movie Song Secret
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் தன்னுடைய முதல் படத்தில் இருந்து பாடல்களின் டெம்பிளேட்டை மாற்றவே இல்லை. அதன்படி அவர் தன்னுடைய படங்களில் ராஜா பாட்டு, மாடர்ன் பாட்டு, குத்து பாட்டு, ஃபாரின் பாட்டு ஆகிய நான்கு விதமான பாடல்கள் இல்லாமல் படமே எடுத்ததில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் நிஜம்.
Gentleman
ஜென்டில்மேன்
ஷங்கரின் முதல் இரு திரைப்படங்களான ஜென்டில்மேன் மற்றும் காதலன் ஆகியவை கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் இதில் ஃபாரின் பாடல் மட்டும் இடம்பெற்றிருக்காது. மற்றபடி ஜென்டில்மேன் படத்தில் ஒட்டகத்த கட்டிக்கோ பாடலை ராஜா, ராணி தீமில் பண்ணி இருந்தார். அதேபோல் சிக்குபுக்கு ரயிலே பாடலை மாடர்ன் பாடலாகவும், உசிலம்பட்டி பெண்குட்டி பாடலை குத்துப் பாடலாகவும் எடுத்திருப்பார் ஷங்கர்.
Kadhalan
காதலன்
காதலன் படத்தில் ராஜா சாங் எதுன்னுதான யோசிக்கிறீர்கள். அங்கு ஒரு ட்விஸ்ட் இருக்கு. கவ்பாய் ஆக பிரபுதேவா நடித்த முக்காலா முக்காபுலா பாடலை தான் ராஜா சாங் போல் காட்சிபடுத்தி இருப்பார் ஷங்கர். அதேபோல் மாடர்ன் பாடலாக ஊர்வசி ஊர்வசி பாடலையும், பேட்ட ரேப் பாடலை குத்துப் பாடலாகவும் ஷங்கர் எடுத்திருப்பார்.
Indian movie
இந்தியன்
இந்தியன் திரைப்படத்தில் மாயா மச்சிந்திரா பாடலை ராஜா சாங் ஆக படமாக்கிய ஷங்கர், மாடர்ன் பாடலாக அக்கடா பாடலையும், பச்சைக்கிளிகள் பாடலை குத்துப்பாடலாகவும், ஃபாரின் பாடலாக டெலிபோன் மணிபோல் பாடலை பயன்படுத்தி இருப்பார்.
Jeans Movie
ஜீன்ஸ்
ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே கொல்லாதே பாடலை ராஜா ஸ்டைல் பாடலாகவும், கொலம்பஸ் விட்டாச்சு லீவு பாடலை மாடர்ன் பாடலாகவும், ஹைர ஹைரா ஹைராப்பா பாடலை ஃபாரின் பாடலாகவும் காட்சிப்படுத்தி இருப்பார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்...3 மாசம் தாங்குமானு கேட்டவங்களுக்கு என்னோட பதில்... குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - குவியும் வாழ்த்து
Mudhalvan Movie
முதல்வன்
முதல்வன் படத்தில் முதல்வனே பாடலை ராஜா தீம் பாடலாகவும், உப்பு கருவாடு பாடலை குத்துப் பாடலாகவும், ஷக்கலக்க பேபி பாடலை மாடர்ன் பாடலாகவும் காட்சிப்படுத்தி அசத்தி இருப்பார் இயக்குனர் ஷங்கர்.
Sivaji The Boss
சிவாஜி
ரஜினியும்- ஷங்கரும் முதன்முறையாக இணைந்த சிவாஜி படத்திலும் இந்த 4 கேட்டகிரி பாடலை யூஸ் பண்ணி இருப்பார் ஷங்கர். வாஜி வாஜி பாடலை ராஜா ஸ்டைலிலும், ஒரு கூடை சன் லைட் பாடலை ஃபாரினிலும் படமாக்கி இருந்த ஷங்கர், பல்லே லக்கா என்கிற குத்துப்பாடல் மற்றும் தீ தீ பாடலை மாடர்ன் பாடலாகவும் உருவாக்கி இருந்தனர்.
Enthiran
எந்திரன்
எந்திரன் படத்தில் இடம்பெறும் அரிமா அரிமா பாடலை ராஜா தீமிலும், காதல் அணுக்கள் பாடல் ஃபாரின் பாடலாகவும், கிளிமஞ்சாரோ குத்துப் பாடலாகவும், இரும்பிலே ஒரு இருதயம் பாடலை மாடர்ன் பாடலாகவும் எடுத்திருந்தார் ஷங்கர்.
I Movie
ஐ
ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால் பாடலை ராஜா தீமிலும், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலை ஃபாரின் சாங் ஆகவும், லேடியோ பாடலை மாடர்ன் சாங் ஆகவும், மெரசலாயிட்டேன் பாடலை குத்துப்பாடலாகவும் காட்சி படுத்தி இருந்தார் ஷங்கர்.
Nanban
நண்பன்
4 பாடல்கள் இல்லாமல் தன்னுடைய படங்கள் இருக்காது என்பதை நண்பன் படத்தில் ஓப்பனாகவே சொல்லி இருப்பார் ஷங்கர். நண்பன் படத்தில் இடம்பெறும் அஸ்க் லஸ்கா பாடலில் இந்த 4 தீமிலும் பாடல் இருக்கும். அதில் கிளாப் போர்டிலேயே அந்த 4 பாடல்களின் பெயரையும் குறிப்பிட்டு இருப்பார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... நடிகை சாய் பல்லவியின் காதலன் இவர்தானா? 10 வருட காதலாம் பாஸ்!!