MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏலத்தில் எம்.ஜி.ஆரையே தோற்கடித்த சாவித்ரி - காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

ஏலத்தில் எம்.ஜி.ஆரையே தோற்கடித்த சாவித்ரி - காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Savitri Beat MGR : பழம்பெரும் நடிகை சாவித்ரி, ஏலத்தில் எம்.ஜி.ஆர் உடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற சுவாரஸ்ய கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2024, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
savitri ganesan

savitri ganesan

நடிகை சாவித்ரி சினிமா உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கோடி கோடியாய் சம்பாதித்தது மட்டுமின்றி அந்த பணத்தில் அதிக தான தர்மங்களை செய்து வந்தார். குறிப்பாக போர் நடைபெற்ற சமயத்தில் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் சாவித்ரி. நிதி திரட்டுவதற்காக ஜெமினி கணேசன் உடன் சேர்ந்து சாவித்ரி போட்ட நாடகம் மூலம் 12 லட்சம் வருவாய் கிடைத்தது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியே நேரில் வந்தார். அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களையும் தானமாக கொடுத்தார் சாவித்ரி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Savitri

Actress Savitri

இதேபோல் 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தலைமையில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், சாவித்ரி, ஜெயலலிதா, சந்திரபாபு என தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அணிதிரண்டு போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொல்ல டெல்லியில் குவிந்தார்கள். சிப்பாய்களுக்கு மத்தியில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக சிவாஜி - சாவித்ரி இணைந்து நடத்திய சத்யவான் தெருக்கூத்து இருந்தது.

இதையும் படியுங்கள்... பாவம் பார்த்த என் தாய் வாழ்க்கையை பங்கு போட்டவர் சாவித்திரி! வீட்டுக்குள் வந்தது எப்படி? ஜெமினி மகள் பளீச்!

34
Savitri Help

Savitri Help

இதுதவிர பத்மினி, சந்திரபாபு, ராஜ சுலோச்சனா பங்கேற்ற பாங்கிரா நடனம், ஜெயலலிதாவின் நாட்டியம் ஆகியவையும் ஹைலைட்டாக இருந்தது/ இதையடுத்து அந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி ஜலந்தரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற சாவித்ரி, அங்கு விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செயலால் சாவித்ரி கண்கலங்கிப்போனாராம். போரில் என் கைகளை இழந்துவிட்டேன், அதனால் என் தலையால் உங்களை வணங்குகிறேன் என்று அந்த இளைஞர் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய சாவித்ரி, அவரை கட்டிப்பிடித்து அழுததோடு, நீ தாண்டா என் தம்பி என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அந்த இளைஞர் கழுத்தில் போட்டு விட்டிருக்கிறார் சாவித்ரி.

44
Savitri beat MGR in Auction

Savitri beat MGR in Auction

இப்படி அந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு போரிலும் சாவித்ரியின் பங்களிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருமுறை வங்காள தேச நிதிக்காக மான் குட்டி ஒன்றை ஐதராபாத்தில் ஏலம் விட்டிருக்கிறார்கள். அதில் சாவித்ரி தான் வெற்றிபெற்றார். அவர் வென்றது யாரை தெரியுமா... புரட்சித் தலைவர் எம்ஜிஆரை தான். அந்த ஏலத்தில் எம்ஜிஆரை விட அதிக தொகைக்கு அதாவது 32 ஆயிரத்திற்கு அந்த மான் குட்டியை ஏலம் எடுத்திருக்கிறார் சாவித்ரி. அந்த ஏலப்பணம் அப்படியே வங்காள தேச அகதிகளுக்கு போய் சேர்ந்தது. இப்படி ஏராளமான தான தர்மம் செய்திருந்தாலும் அதில் ஒன்று கூட கருணை உருவாக மாறி அவரது இறுதி நாட்களில் அவரை காப்பாற்றவில்லை.

இதையும் படியுங்கள்... சாவித்திரிக்கு காலையில் கணவனாகவும்.. மாலையில் மகனாகவும் நடித்த ஒரே நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.1 ov)100/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 92 runs in 59 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved