MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விசுவின் ராஜதந்திரம்... பிளாப் படத்தை ரீமேக் செய்து ஹிட் அடிக்க வைத்த ஜீனியஸ்..!

விசுவின் ராஜதந்திரம்... பிளாப் படத்தை ரீமேக் செய்து ஹிட் அடிக்க வைத்த ஜீனியஸ்..!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞர்களில் விசுவும் ஒருவர், அவர் படுதோல்வி அடைந்த படத்தின் கதையை ரீமேக் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 27 2026, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Samsaram Adhu Minsaram Movie Secret
Image Credit : Twitter

Samsaram Adhu Minsaram Movie Secret

தமிழ் சினிமா வரலாற்றில் குடும்ப உணர்வை மையமாக வைத்து உருவான படங்களில் முக்கியமான இடம் பெறுவது இயக்குனர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986-ல் வெளியான இந்தப் படம், ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்ப வாழ்வின் இனிமையையும், இன்னல்களையும் நகைச்சுவை கலந்து படம் பிடித்த விசு, தாமே நடித்தும் உயிர் கொடுத்தார். மனோரமா ஓர் வீட்டு பணியாளராக நடித்த காட்சிகள் இன்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றன.

24
சம்சாரம் அது மின்சாரம் படம் உருவான கதை
Image Credit : our own

சம்சாரம் அது மின்சாரம் படம் உருவான கதை

குறிப்பாக, குழந்தையை விசுவின் காலடியில் வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி, சொற்களுக்கு அப்பாற்பட்ட நடிப்பின் உச்சமாக திகழ்கிறது. இசையமைப்பாளர்கள் சங்கர்–கணேஷ் இணையரும், பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய பாடல்கள், படத்திற்கு தனி அடையாளம் சேர்த்தன. பெற்றோரின் தியாகத்தை வலியுறுத்திய வரிகள் இன்றும் தலைமுறை தாண்டி பேசப்படுகின்றன. 'சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்' பிரிவில் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

Related Articles

Related image1
இந்த ஒரு தமிழ் படத்தால் 38 விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன... சினிமா நிகழ்த்திய மேஜிக்..!
Related image2
768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!
34
திருப்புமுனை தந்த மனோரமா கேரக்டர்
Image Credit : our own

திருப்புமுனை தந்த மனோரமா கேரக்டர்

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் படப்பிடிப்பிற்காக கட்டப்பட்ட வீட்டில் சூட்டிங் செய்வதை நடிகர் ரஜினிகாந்த் மிகவும் விரும்பினாராம். மனிதர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் உணர்வு ரீதியாக தூரமாகி விடும் நவீன சூழலில், இந்தப் படம் சொல்லும் செய்தி இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது. இதில் மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ஹைலைட்டாக இடம்பெற்ற மனோரமா கேரக்டர், முதலில் படத்திலேயே இல்லையாம். கதையில் காமெடி கதாபாத்திரம் இருந்தால் அது படத்தின் கருவை பாதிக்கும் என எண்ணி அதை தவிர்த்தாராம் விசு.

44
ஏவிஎம் சரவணனால் நடந்த மேஜிக்
Image Credit : our own

ஏவிஎம் சரவணனால் நடந்த மேஜிக்

பின்னாளில் ஏவிஎம் சரவணன் வற்புறுத்தி மனோரமா கதாபாத்திரத்தை படத்தில் வைக்க சொன்னாராம். அதன்பின்னரே விசு அந்த கேரக்டரை படத்திற்குள் கொண்டு வந்தாராம். இறுதியில் மனோரமாவின் கெரியரிலேயே சிறந்த கேரக்டராக அது அமைந்தது. அந்த கதாபாத்திரத்தில் கம்முனு கெட என சொல்லிக் கொண்டே மனோரமா பேசும் நீண்ட டயலாக் இன்றளவும் பேசப்படுகிறது. இந்தப் படம் அன்றைய தேதியில் வெறும் 15 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இது தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. முன்னதாக உறவுக்கு கை கொடுப்போம் என்கிற பெயரில் இதே கதையை படமாக்கி இருந்தனர். 1975-ல் வெளிவந்த அப்படம் தோல்வியடைந்தது. பின்னர் அதே கதையை 1986-ல் சம்சாரம் அது மின்சாரம் என்கிற பெயரில் எடுத்து விசு வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
'காலில் கூட விழுகிறேன்.. பணத்தை கொடு! - கதறும் ஆனந்தி; சிங்கப்பெண்ணே தொடரில் நிலவும் உச்சக்கட்ட பரபரப்பு
Recommended image2
ஈஸ்வரியால் எஸ்கேப் ஆகும் ஆதி குணசேகரன்... மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
Related Stories
Recommended image1
இந்த ஒரு தமிழ் படத்தால் 38 விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன... சினிமா நிகழ்த்திய மேஜிக்..!
Recommended image2
768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved