MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில்... ரீ-என்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார் அமலா!!

30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில்... ரீ-என்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார் அமலா!!

பிரபல நடிகை சமந்தாவின் (Samantha Akkineni) மாமியாரும், nadigaiyumaanaஅமலா (Amala Akkineni ) சுமார் 30 வருடங்களுக்கு பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 24 2021, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

1986 ஆம் ஆண்டு, இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா.
 

27

இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களின் நடிக்க துவங்கினார்.

அந்த வகையில் அதே ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான 'மெல்ல திறந்த கதவு', 'கண்ணே கணியமுதே', 'ஒரு இனிய உதயம்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

 
 
37

குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘சத்யா’, ‘வெற்றி விழா’ பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்’, ‘இல்லம்’, ‘நாளைய மனிதன், சத்யராஜூடன் ‘ஜீவா’ வேதம் புதிது உள்பட பல முன்னணி நடிகர்களுடன்  80கள், 90களில் நடித்தார்.

 
47

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் கடைசியாக 1991 ஆம் ஆண்டு வெளியான 'கற்பூர முல்லை' என்கிற படத்தில் தான் நடித்தார். இயக்குனர் ஃபாசில் இயக்கிய இந்த படத்தில் ராஜா, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

 
57

மற்ற மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்ததால் இவரால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.

பின்னர் 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிப்பதையும் குறைத்து கொண்டார்.

 
67

இந்நிலையில் தற்போது சுமார் 30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் அமலா. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தில் நாயகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

77

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ’கணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹிட் சுனாமி ராஷ்மிகா! டாப் 10 படங்களில் 5 படம் ரூ.250 கோடி வசூல் சாதனை.!
Recommended image2
சரத்குமாரின் ‘ஆழி’ தாய் கிழவியை விட சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image3
ஆதி குணசேகரன் பக்கம் சாயும் சக்தி... ஜனனி எடுக்கப்போகும் முடிவு என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved