Naga Chaitanya first wife : நாக சைதன்யாவின் முதல் மனைவி யார்? அம்பலப்படுத்திய சமந்தா..
Naga Chaitanya first wife : நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்தார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது..

samantha
சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
samantha
கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
samantha
விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் தங்களுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கியுள்ளனர்.
samantha
விவாகரத்துக்கு பின் இவர்கள் இருவரது சினிமா கெரியரும் சக்சஸ்புல்லாக உள்ளது. இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார்.
samantha
அதேபோல் நாக சைதன்யாவும், தனது மார்க்கெட்டை விரிவாக்கி பாலிவுட் வரை சென்றுவிட்டார். அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார்.
samantha
இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இது ஒருபுறம் இருக்க இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது.
samantha
அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளும், ஒரு வேளை அப்படி இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. சமீபத்தில் பங்கார்ராஜு பட புரமோஷன் போது சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, தனக்கு சிறந்த ஜோடி சமந்தா தான் என கூறினார்.
samantha
இந்நிலையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்தார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.. அந்த பேட்டியில் நாகசைதன்யா குறித்து பேசிய சமந்தா " "அவருக்கு pillow தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த தலையணை நடுவில் இருக்கும்" என சமந்தா கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.