Sai Pallavi: சாய் பல்லவியால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழிக்க முடியாது! என்ன காரணம்?
நடிகை சாய் பல்லவி தன்னுடைய வழக்கமான வாழ்க்கை முறை குறித்து பேசி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அதே போல் இரவு 9 மணிக்கு மேல் தன்னால் கண் விழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இயற்கை பேரழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சாய் பல்லவியின் தினசரி வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. ஒரு மருத்துவராக இருந்தும், சினிமாவில் கால் பதித்து கலக்கி வரும் சாய் பல்லவி, சமீபத்தில் நடந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
வாழ்க்கை முறை பற்றி பகிர்ந்த சாய் பல்லவி
தன்னுடைய வாழ்க்கை முறை பற்றி சாய் பல்லவி பேசியபோது, 'நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். நான் ஏன் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் படிப்பு - வேலை என ஓட ஆரம்பித்தபோது எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது'.
சாய் பல்லவிக்கு வந்த பழக்கம்
'நான் ஜார்ஜியாவில் படித்துக்கொண்டிருக்கும் போது, காலை 3.30 மணியளவில் எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் இந்த முறை என் உடலுக்குப் பழகிவிட்டது'.
காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் சாய் பல்லவி
'கல்லூரி முடிந்து நான் வீட்டில் ஓய்வில் இருந்தாலும், சீக்கிரம் எழுந்து விடுவேன். நானே தூங்க முயற்சித்தாலும், என்னால் தூங்க முடியாது. அதனால் தினமும் 4 மணிக்கு எழுந்து என்னுடைய தினசரி வேலைகளை செய்ய துவங்கி விடுவேன் என கூறி உள்ளார்.
ஷூட்டிங்கில் குழந்தை போல் அடம்பிடிக்கும் சாய் பல்லவி:
அதே போல் 'பல திரைப்படங்கள் இரவு முழுவதும் படமாக்கப்படுகின்றன, ஆனால் என்னால் 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது. என்னுடைய இந்த பழக்கத்தை பார்த்து, இயக்குனர்கள் ஒரு சிறு பிள்ளை நான் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். காரணம் அடம் பிடித்தாவது இரவு 9 மணிக்கு தூங்கி விடுவேன் என்பதால். இது இரவு நேர ஷூட்டிங்கில் எனக்கு பிரச்சனையாக இருந்தாலும், இதை ஒரு நல்ல பழக்கமாகவே நான் பார்க்கிறேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு 1 அல்லது 2 படங்களில் மட்டுமே நடிக்கும் சாய் பல்லவி
சாய் பல்லவி வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன், மற்றும் இந்த ஆண்டு வெளியான தண்டேல் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
Sai Pallavi: திருமணத்திற்காக பாட்டி கொடுத்த சேலையை; சாய் பல்லவி ஏற்ற சபதம் நிறைவேறுமா?
2025-ல் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சாய் பல்லவி
தற்போது பாலிவுட் திரையுலகின் பக்கம் சென்றுள்ள சாய் பல்லவி ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்திலும், அமீர் கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். சம்பள விஷயத்திலும் தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, சமந்தாவை பீட் பண்ணும் விதத்தில், ரூ.15 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த மூலம் 2025-ல் அதிக சம்பளம் பெரும் நடிகையாகவும் சாய் பல்லவி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.