MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!

பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!

கவிஞர் சினேகனுக்கும் (Snehan), நடிகை கன்னிகா ரவிக்கும் (Kannika Ravi) ஜூலை மாதம் திருமணம் நடந்த நிலையில், தற்போது காதல் பொங்க பொங்க இருவரும் தங்கள் கையில் மாறி மாறி பெயரை டாட்டூ குத்திகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 02 2021, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

28
snehan marriage

snehan marriage

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், இரண்டாவது இடத்தை பிடித்தார். 

38

சமீபகாலமாக, அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன்  உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் இது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், தொடர்து மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என கூறி வந்தார்.

48

இந்நிலையில் திடீர் என சினேகனின் திருமண பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இவரது காதல் விவகாரமும் வெளியே வந்தது. சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடந்தது.

58

திருமணம் நடந்து முடிந்த கையேடு தன் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த சினேகன், படப்பிடிப்புக்காக தன்னுடைய மனைவியுடன் வெளியூருக்கு பறந்தார்.

 

68

தற்போது இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் - கன்னிகா ஜோடி, தங்களது பெயரை மாறி மாறி கையில் டாட்டூ குத்தி கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

 

78

தங்களுடைய காதல் திருமணத்தின் அடையாளமாக வலியை பொறுத்து கொண்டு இருவரும் டாட்டூ குத்திகொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

88

சினேகன் தற்போது ’குறுக்குவழி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved