51 பேரை டாக்டராக்கிய சூர்யாவின் செயலால் வியந்த நடிகை ரோஜா!
Roja Amazed by Actor Suriya Act of Sponsoring : நடிகர் சூர்யா தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும், அவர் செய்த ஒரு செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் நடிகை ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் செயலால் வியந்த ரோஜா
நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா என்ன பேசினாலும் வைரலாகும். அரசியலில் ஃபயர் பிராண்டாக அறியப்படும் இவர், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.
சூர்யா தனக்கு இன்ஸ்பிரேஷன்
சூர்யா தனக்கு இன்ஸ்பிரேஷன் என ரோஜா கூறியுள்ளார். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் சூர்யா பல ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
51 மாணவர்கள் மருத்துவர்களாகியுள்ளனர்
அகரம் ஃபவுண்டேஷன் உதவியால் 51 மாணவர்கள் மருத்துவர்களாகியுள்ளனர். 15-ம் ஆண்டு விழாவில் அவர்களை மேடையில் பார்த்த சூர்யா உணர்ச்சிவசப்பட்டார். 1800 பேர் பொறியாளர்களாகவும் ஆகியுள்ளனர்.
சூர்யா படிக்க வைத்ததை அறிந்த ரோஜா
இத்தனை மருத்துவர்களை சூர்யா படிக்க வைத்ததை அறிந்து என் மைண்ட் பிளாக் ஆனது. அந்த விஷயத்தில் சூர்யா எனக்கு முன்மாதிரி. நானும் என் அளவில் சேவை செய்கிறேன் என ரோஜா கூறினார்.
தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா
தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா, தெலுங்கிலும் நடிப்பாரா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் இவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.