MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸில் சுனாமி போல் வசூலை வாரிசுருட்டிய காந்தாரா சாப்டர் 1... முதல் நாள் கலெக்‌ஷனே இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆபிஸில் சுனாமி போல் வசூலை வாரிசுருட்டிய காந்தாரா சாப்டர் 1... முதல் நாள் கலெக்‌ஷனே இத்தனை கோடியா?

ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kantara Chapter 1 Box Office
Image Credit : X/hombale films

Kantara Chapter 1 Box Office

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter 1) திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. 2022-ல் வெளியான 'காந்தாரா' திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் முன்கதையாக காந்தாரா சாப்டர் 1 வந்துள்ளது, மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காந்தாரா சாப்டர் 1 படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது.

24
காந்தாரா சாப்டர் 1
Image Credit : X/hombale films

காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்தியாவில் மொத்தம் 6500 திரைகளில் சுமார் 12,511க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்காவில் மட்டும் இப்படம் சுமார் 4.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 30 நாடுகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் முதல் நாள் வசூல் சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிளாக்பஸ்டர் தொடக்கத்தைக் கண்ட இந்தப் படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளன, வியாழக்கிழமை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

Related Articles

Related image1
Kantara Chapter 1 First Review :காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ஓ இதுதான் படத்தோட ஹைலைட்ஸா?
Related image2
காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ரிஷப் ஷெட்டிக்கு கைகொடுத்ததா? இல்லையா?
34
காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ்
Image Credit : X/hombale films

காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளே இந்தியாவில் மட்டும் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அதிகபட்சமாக இப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.19.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.18 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.12.5 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.5.25 கோடியும், மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்து இருக்கிறது. இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

44
சாதனை படைத்த காந்தாரா
Image Credit : instagram

சாதனை படைத்த காந்தாரா

காந்தாரா படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது முதல்நாளில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் தற்போது அதைவிட 10 மடங்கு கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு 1000 கோடி வசூல் செய்த முதல் படமாக காந்தாரா சாப்டர் 1 அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் கன்னட திரையுலகில் 1000 கோடி வசூல் அள்ளிய ஒரே படம் கேஜிஎஃப் 2 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Related Stories
Recommended image1
Kantara Chapter 1 First Review :காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ஓ இதுதான் படத்தோட ஹைலைட்ஸா?
Recommended image2
காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ரிஷப் ஷெட்டிக்கு கைகொடுத்ததா? இல்லையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved