- Home
- Cinema
- 46 வயதில் கர்ப்பம்; வயிற்றில் குழந்தையோடு நடிகை சங்கீதா நடத்திய க்யூட்டான பிரக்னன்ஸி போட்டோஷூட்
46 வயதில் கர்ப்பம்; வயிற்றில் குழந்தையோடு நடிகை சங்கீதா நடத்திய க்யூட்டான பிரக்னன்ஸி போட்டோஷூட்
நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா 46 வயதில் கர்ப்பமாகி உள்ள நிலையில், அவர் முதன்முறையாக பிரக்னன்ஸி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

Redin Kingsley Wife Sangeetha Pregnancy Photoshoot : ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும், சீரியல் நடிகையுமான சங்கீதா, வயிற்றில் குழந்தையோடு கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆனார். இவருக்கு 40 வயதுக்கு மேலாகியும் திருமணமே ஆகாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்தார். இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 46 வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம்பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி. இவர்கள் திருமணம் எளிமையாக கோவிலில் நடைபெற்றது.
Redin Kingsley Wife Sangeetha
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியானது. இதையடுத்து மனைவிக்கு கிராண்டாக வளைகாப்பு நடத்தி தாங்கள் விரைவில் பெற்றோர் ஆக உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரெடின் கிங்ஸ்லி. இந்நிலையில், நிறைமாதம் கர்ப்பிணியாக இருக்கும் சங்கீதா, வயிற்றில் குழந்தையோடு, கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!
Sangeetha Pregnancy Photoshoot
சிகப்பு நிற ஆடை அணிந்து, விதவிதமாக போஸ் கொடுத்து சங்கீதா நடத்தி உள்ள இந்த பிரக்னன்ஸி போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு போட்டோவில் தனக்கு பிறக்கபோவது பையனா இல்லை பெண்ணா என கேட்கும் விதமாக இரண்டு பதாகைகளை கையில் வைத்துள்ளபடி போஸ் கொடுத்துள்ளார் சங்கீதா. இதற்கு உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Redin kingsley Wife Pregnant
நடிகை சங்கீதாவுக்கு தற்போது 46 வயது ஆகிறது. இவர் விஜய்யின் மாஸ்டர் உள்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் சங்கீதா. தற்போது கர்ப்பமாக இருப்பதால் சில மாதங்களுக்கு சீரியல்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுள்ளார் சங்கீதா.
இதையும் படியுங்கள்... திருமணமாகி ஓராண்டுக்கு பின் வந்த குட் நியூஸ்; உற்சாகத்தில் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி!