ரெஜினா கசாண்ட்ரா: முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?
Reason for Regina Cassandra Conversion : ரெஜினா கசாண்ட்ரா ஒரு கிறிஸ்தவர் என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு முஸ்லிம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ பெயரை ஏன் சூட்டிக்கொண்டார் என்பதை ரெஜினா வெளிப்படுத்தியுள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா
தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் ரெஜினா. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவர், கிறிஸ்தவர் என பலரும் நினைக்கின்றனர். இந்த உண்மையை அவரே வெளிப்படுத்தியுள்ளார். ரெஜினாவின் தந்தை ஒரு முஸ்லிம், தாய் கிறிஸ்தவர். பெற்றோர் விவாகரத்து பெற்றதால், தாயுடன் சென்றார். தாய் கிறிஸ்தவர் என்பதால், ஞானஸ்நானம் பெற்று ரெஜினா கசாண்ட்ரா ஆனார்.
அனைத்து மதங்களும் சமம்
அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதாக ரெஜினா கூறுகிறார். உளவியலில் பட்டம் பெற்ற இவர், அதுவே தனது வாழ்க்கையையும், கதாபாத்திரங்களையும் புரிந்துகொள்ள உதவியதாகக் கூறினார். ரெஜினா தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். யோகா, ஜிம் ஆகியவை அவரது அன்றாட வாழ்வின் ஒரு பகுதி. மன அழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.
ஃபர்ஸி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா, விலங்குகள் மீது பிரியம் கொண்டவர். தற்போது பட வாய்ப்புகள் குறைந்தாலும், ஃபர்ஸி போன்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.