சோனு சூட்டை பார்த்ததும் கடவுளாக நினைத்தது காலில் விழுந்த மாற்று திறனாளி ரசிகர்! நெகிழ வைத்த புகைப்பட தொகுப்பு!
பாலிவுட் நடிகர் சோனு சூட் (soonu sood) தற்போது ரசிகர்களாலும் ஏழை மக்களாலும் அதிகம் விரும்பப்படும் ரியல் ஹீரோவாக (Real Hero) மனதில் இடம்பிடித்து விட்டார். தற்போது இவருடைய வீட்டின் முன், ரசிகர்கள் குவிந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி பூஜித்து வருகிறார்கள்.
இன்னிலையில், இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிலையில், இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று திடீர் என சோனு சூட் வீட்டின் முன்பு 50 திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடினார்கள். அதிலும் மாற்று திறனாளி ஒருவர் சோனு சூட் காலில் விழுந்தது பலரையும் நெகிழ வைத்தது.
தன்னுடைய ரசிகர்கள் பிரச்சனைகள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட ரியல் ஹீரோ சோனு சூட் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டார்.