அடுத்த பெரிய வீட்டு கல்யாணம்... காதல் ஜோடியான வாரிசு நடிகர்-நடிகைக்கு விரைவில் ‘டும் டும் டும்’...!
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய கலைக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து நிஹாரிகா - சைதன்யா திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இளம் காதல் ஜோடியின் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவிற்கு அடுத்த திருமண கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் இளம் ஜோடியாக ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி உள்ளது.
பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான ரன்பீர் கபூர், அதன் பின்னர் வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக வலம் வருகிறார்.
அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்.
அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் நடித்தபோது ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையே காதல் ஏற்பட்டது. ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார்.
2018ம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது வந்தது. மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவிற்கும் திருமணம் எப்போது என ஒட்டுமொத்த இந்தி திரையுலகமே ஆவலுடன் காத்திருந்தது.
இந்நிலையில், பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய உரையாடலில் நடிகர் ரன்பீர் கபூரிடம் எப்போ திருமணம் என்கிற கேள்விக்கு, தனது காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அதிரடியாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார். சிரித்துக்கொண்டே ரன்பீர் சொன்ன இந்த பதில் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய கலைக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து நிஹாரிகா - சைதன்யா திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது அடுத்த பெரிய வீட்டு காதல் ஜோடிக்கு தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடக்க உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.