சேலையை சரிய விட்டு... புன்னகையில் போதை ஏற்றி... இளம் நெஞ்சங்களை ஜிவ்வுனு இழுக்கும் ரகுல் பிரீத் சிங்!!
தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), சேலையை சரிய விட்டு கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருப்பதோடு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கை பற்றி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வந்த நிலையில், அந்த படம் தயாரிப்பு தரப்புக்கும் - இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே நின்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதை போல் சர்ச்சை வழக்கிலும் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங், கடந்த மாதம் NCB அதிகாரிகளின் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆகி பதிலளித்தார். இதை தொடர்ந்து வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களில் இவரது கவனம் திரும்பியுள்ளது.
தமிழ் - தெலுங்கு மொழிகளை விட, சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது வெள்ளை நிற புடவையில் சிவப்பு டாட் வைத்தது போன்று, வழவழப்பான புடவையில், புன்னகையோடு கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.