- Home
- Cinema
- துபாயில் சொகுசு பங்களா கொடுத்து...கவர்ச்சியை குறைக்க சொன்ன காதலன்.. ஷாக்கான சர்ச்சை நடிகை!
துபாயில் சொகுசு பங்களா கொடுத்து...கவர்ச்சியை குறைக்க சொன்ன காதலன்.. ஷாக்கான சர்ச்சை நடிகை!
பாலிவுட்டில் அவ்வோது கலவரத்தை ஏற்படுத்தி வரும் ராக்கி சாவந்த் குறித்து அவரது காதலர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

rakhi sawant
பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant) தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். அண்மையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் தடாலடியாக தனது காதல் கணவரை பிரிவதாக காதலர் தினத்தன்று அறிவித்து ஷாக் கொடுத்தார்.
rakhi sawant
இதையடுத்து சில நாட்களிலேயே ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாகவும் அவர் தனக்கு பிஎம்டபுள்யூ கார் வாங்கி கொடுக்கவும் கூறியிருந்தார். இதையடுத்து ஆதில் கானுடன் ஜோடியாக சுற்றி வரும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.இந்நிலையில் ஆதில் கான் துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கியிருப்பதாகவும் நடிகை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
rakhi sawant
அதோடு ராக்கி அவர்கள் இருவரும் தங்கள் உறவில் எப்படி தீவிரமாக இருக்கிறார்கள் என்பதையும், அவர் அவளை தனது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தினார் என்பதையும் கூறினார். இருப்பினும், தனது குடும்பத்தினரிடமிருந்து சில எதிர்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் ராக்கி தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் கூறியதற்காகவும் ஆதில் கூறினார்.
rakhi sawant
இதற்கிடையே ராக்கியின் காதலருக்கு அவர் ஆடை அணிவதில் சிக்கல் உள்ளது. அவர் ஊடகங்களிடம் கொடுத்த பேட்டியில்: "அவள் கவர்ச்சி குறைவான மற்றும் அதிக கவர் கொண்ட ஆடைகளை அணிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என கூறியுள்ளார்.