- Home
- Cinema
- Rajnikanth birthday special: சூப்பர் ஸ்டார் ஏன் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்று அழைக்கப்படுகிறார் தெரியமா?
Rajnikanth birthday special: சூப்பர் ஸ்டார் ஏன் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்று அழைக்கப்படுகிறார் தெரியமா?
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஏன் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்த அரிய தகவல்கள் இதோ...

தலைவர்... சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய படங்கள் வெளியாகும் போது ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து பூஜித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதே போல் தான் இன்று தலைவரின் 71 ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள்.
71 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்துக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே... உண்மையில் அவர் ஒரு மீசை வைத்த குழந்தையாகவே பார்க்கப்படுகிறார்.
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 100 கோடி வசூல் செய்து கெத்து காட்டியுள்ளது. (2007) ஆம் ஆண்டு வெளியான சிவாஜி முதல் (2019) ஆன் ஆண்டு வெளியான பேட்ட என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 வசூல் பட்டியலில், ரஜினிகாந்த் ஆறு முறை இடம்பிடித்துள்ளார். 71 வயதிலும் வணிக ரீதியாகத் மிரட்டி வரும் ஒரே நடிகர் இவர் தான் என கூறினால் அது மிகையல்ல.
72 மற்றும் 75 வயதுடைய அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் சில்வெஸ்டர் ஸ்டலோன் போன்ற உலகளாவிய நட்சத்திரங்கள் கூட 'டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் ' மற்றும் 'ராம்போ: லாஸ்ட் பிளட்' ஆகிய படங்களின் தோல்விக்குப் பிறகு அவர்கள் திரையுலகில் இயக்கத்தையே சந்தித்தனர்.
ஆனால் தலைவர் எப்போதுமே வேற லெவல் தான். சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான அண்ணாத்த படம் கூட, சுமார் 100 கோடி வசூல் செய்து வெற்றி வாகை சூடியது. இந்த மகிழ்ச்சியில் இயக்குனர் சிவாவை நேரில் சந்தித்து அவருக்கு தலைவர் தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியம், அவரது ரசிகர்களும், ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைலும் தான் தற்போது வரை அவரை பாக்ஸ் ஆபீஸ் கிங்காக நினைத்திருக்க செய்துள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது மட்டும் இன்றி... வளர்ந்து வரும் இயக்குனர்களாக அறியப்பட்ட பா.ரஞ்சித், கார்த்தி சுப்புராஜ், போன்ற இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.