MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush Divorce : ரஜினி செய்த பஞ்சாயத்து..! அந்த 2 வாரங்கள்.. போயஸ் தோட்டத்து பரபர நிகழ்வுகள்..

Dhanush Divorce : ரஜினி செய்த பஞ்சாயத்து..! அந்த 2 வாரங்கள்.. போயஸ் தோட்டத்து பரபர நிகழ்வுகள்..

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் 2 வாரங்களாக சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லாததால், இனி நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என ஒதுங்கிவிட்டாராம் ரஜினி. 

2 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Jan 19 2022, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் விவாகரத்து முடிவை அறிவித்தது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். இருவரும் விவாகரத்துக்கான காரணங்களை தெரிவிக்காததால், அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால், ஏராளமான காரணங்கள் கூறப்படுகிறது.

26

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவை 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். பல வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு நிலை வந்த போது இருதரப்பு குடும்பமும் பேசி அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துள்ளனர். இது நடந்து 7 வருடங்களுக்கு மேல் இருக்குமாம்.

36

அதன்பின் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனுஷ் பற்றிய சில புகார்கள் ஐஸ்வர்யாவுக்கே நேரடியாக பறந்துள்ளன. அதில் தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை முற்றி இருக்கிறது.

46

இந்த விவகாரம் ரஜினிக்கு தெரிந்தும் அவர் சரியாகிவிடும் என அமைதி காத்து வந்துள்ளார். ஆனால் தனுஷை பற்றி திரையுலக வட்டாரத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவே இதுதொடர்பாக ஒரு நடிகையிடம் நேரடியாக கேட்டுள்ளார். அந்த நடிகை விஷயத்தை தனுஷ் காதில் ஓதிவிட, அது தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.

56

இந்த விஷயத்தை இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்க... அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார் ரஜினி. இருவரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, குழந்தைங்க இருக்காங்க... அத மனசுல வச்சு முடிவெடுங்க என அட்வைஸ் பண்ணி உள்ளார். ஆனால் இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

66

2 வாரங்களாக சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லாததால், இனி நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என ஒதுங்கிவிட்டாராம் ரஜினி. இதையடுத்து தான் இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்கள். இதன்பின் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்களாம். இருவரின் பிரிவை நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நந்தினிக்கு நேர்ந்த ஆபத்து! துடித்துப்போன சூர்யா; தாய்குலத்தின் சதி- மூன்று முடிச்சு சீரியலில் பரபரப்பு!
Recommended image2
Music: "காற்றில் எந்தன் கீதம்..." - வாலி, வைரமுத்துவுக்கு நடுவே கங்கை அமரன் படைத்த மௌனப் புரட்சி!
Recommended image3
வெளிநாட்டுப் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் தேவரகொண்டா... யார் இந்த வர்ஜீனி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved