MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ்டர் பீஸ் கூட்டணி! ரஜினியின் அடுத்த பட அப்டேட்

33 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ்டர் பீஸ் கூட்டணி! ரஜினியின் அடுத்த பட அப்டேட்

Rajinikanth Next Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக மாஸ்டர் பீஸ் இயக்குனருடன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 01 2024, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

24
coolie

coolie

கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு, நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒரே ஆண்டில் 35 படங்கள்; இன்றும் பல சாதனை படைக்கும் அந்த தென்னக நடிகர் யார் தெரியுமா?

34
Rajinikanth, Maniratnam

Rajinikanth, Maniratnam

இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றுமொரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தை வைத்து தளபதி என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால் இவர்கள் இருவரும் 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளது.

44
Thug life

Thug life

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தக் லைஃப் திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன பின் ரஜினி பட பணிகளை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... வந்த சுவடு தெரியாமல் கிளம்பிட்டாரா? பிக் பாஸ் தமிழ் சீசன் 8 - இந்த வார எலிமினேஷன் யார்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved