MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 45 சவரன் நகையை மீட்ட தூய்மை பணியாளர் பத்மா... தங்க செயின் பரிசளித்து நெகிழ வைத்த ரஜினிகாந்த்..!

45 சவரன் நகையை மீட்ட தூய்மை பணியாளர் பத்மா... தங்க செயின் பரிசளித்து நெகிழ வைத்த ரஜினிகாந்த்..!

சாலையோரம் கிடந்த பையில் இருந்த 45 சவரன் நகையை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மா என்பவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,

1 Min read
Author : Ganesh A
Published : Feb 03 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth Gifted Gold Chain to sanitation Worker
Image Credit : X

Rajinikanth Gifted Gold Chain to sanitation Worker

சென்னையில் நடந்த ஒரு சம்பவம், நேர்மை இன்னும் உயிருடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தியாகராய நகர் பகுதியிலுள்ள முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா என்ற தூய்மைப் பணியாளர், சாலையோரத்தில் கிடந்த ஒரு பையை கண்டெடுத்துள்ளார். அந்தப் பையில் தங்க நகைகள் இருப்பதை பார்ந்த பத்மா, அதை உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பத்மாவின் உயரிய உள்ளம்
Image Credit : X

பத்மாவின் உயரிய உள்ளம்

காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், அந்தப் பையில் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், இதே அளவு நகைகளை இழந்ததாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், உரிய விசாரணைக்கு பிறகு நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

34
பத்மாவுக்கு குவியும் பாராட்டு
Image Credit : X

பத்மாவுக்கு குவியும் பாராட்டு

இந்தச் சம்பவம் சமூக வலைதளம் வாயிலாக வைரலானது. தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். அதுமட்டிமின்றி அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்த முதல்வர், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கினார். பத்மாவின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். தற்போது பத்மாவுக்கு மற்றுமொரு பிரபலத்திடம் இருந்து பரிசு கிடைத்துள்ளது.

44
பத்மாவுக்கு பரிசளித்த ரஜினிகாந்த்
Image Credit : X

பத்மாவுக்கு பரிசளித்த ரஜினிகாந்த்

அவர் வேறு யாருமில்லை சூப்பர்ஸ்டார் தான். நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையை பாராட்டி தங்கச் செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். ரஜினியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நேர்மை தான் உண்மையான செல்வம் என்பதை பத்மாவின் செயலும், அதை மதித்த தலைவர்களும் நிரூபித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் மதுரையில் மலிவு விலையில் புரோட்டா விற்பனை செய்து வரும் தன்னுடைய ரசிகரை நேரில் அழைத்து பாராட்டி இதேபோல் தங்கச் செயின் ரஜினி பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Related Stories
Recommended image1
ரஜினிகாந்த் vs தளபதி விஜய்: யார் பெரிய பணக்காரர்? இருவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Rajini fan: ரசிகரின் சேவையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய சூப்பர் ஸ்டார்.! மதுரைகாரருக்கு ரஜினிகாந்த் கொடுத்த 'கோல்டன்' சர்ப்ரைஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved