MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Coolie Movie : ரஜினியின் கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

Coolie Movie : ரஜினியின் கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

Rajinikanth Coolie Gets Special Shows :ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Aug 12 2025, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
Image Credit : instagram

கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

Rajinikanth Coolie Gets Special Shows :2025ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் 14ஆம் தேதி நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் காம்பினேஷனில் திரைக்கு வரும் 4ஆவது படம்.

இதற்கு முன்னதாக லியோ, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 4ஆவதாக கூலி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெசி, காளி வெங்கட், ஜூனியர் எம்ஜிஆர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

23
ரஜினிகாந்த் கூலி படம்
Image Credit : Facebook

ரஜினிகாந்த் கூலி படம்

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு திரையரங்கு வியாபாரம் செய்துள்ளது. அதோடு ரூ.120 கோடிக்கு அமேசான் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது. இதன் மூலமாக படம் வெளியாவதற்கு முன்னரே கூலி இத்தனை கோடி லாபம் கொடுத்த நிலையில் படம் வெளியான பிறகு எப்படியும் உலகம் முழுவதும் கூலி படத்தின் வசூல் ரூ.1000 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

33
கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி
Image Credit : instagram

கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி

இந்த நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. படம் வெளியாகும் ஆகஸ்ட் 14-ம் தேதியன்று சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்னதாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
கூலி (வெளியீட்டு தேதி)
ரஜினிகாந்த்
நாகார்ஜுனா
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved