MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bhagyaraj: கையெடுத்து கும்பிடுறேன்.! எல்லாரும் போங்க.! பாக்யராஜ் வீட்டில் கோபமாகி கத்திய ராதிகா.!

Bhagyaraj: கையெடுத்து கும்பிடுறேன்.! எல்லாரும் போங்க.! பாக்யராஜ் வீட்டில் கோபமாகி கத்திய ராதிகா.!

Radhika Sarathkumar Angry: மறைந்த நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் உடலை வீட்டிற்கு எடுத்து வரும் வழியில் நடிகை ராதிகா சரத்குமார் கோபமாகி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : Ramprasath S
| Updated : Jun 27 2026, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திடீரென காலமான பாக்யராஜ்
Image Credit : Asianet News

திடீரென காலமான பாக்யராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ்-க்கு இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக கூறி சோபாவில் சரிந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பாக்யராஜ் வீட்டில் குவிந்த மீடியாக்கள்
Image Credit : facebook

பாக்யராஜ் வீட்டில் குவிந்த மீடியாக்கள்

பாக்யராஜ் இயக்குனர் பாரதிராஜாவின் சிஷ்யன் ஆவார். அவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். பாரதிராஜா மறைந்து இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பாக்யராஜும் மறைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாக்யராஜின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல அவரது வீட்டில் நடக்கும் இறுதி சடங்குகளை நேரலை செய்வதற்காக மீடியாக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

Related Articles

Related image1
Bhagyaraj Love Story : சினிமாவை மிஞ்சிய பாக்யராஜ் - பூர்ணிமா காதல் கதை... ரீல் ஜோடி; ரியல் ஜோடியானது எப்படி?
Related image2
Bhagyaraj Net Worth : சினிமா மூலம் கோடிகளை குவித்த பாக்யராஜ்... அடேங்கப்பா அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
35
கோபமடைந்த ராதிகா
Image Credit : facebook

கோபமடைந்த ராதிகா

பாக்யராஜின் உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டு அவர்கள் நேரலை செய்வதற்காக காத்திருந்தனர். இதன் காரணமாக பாக்யராஜின் உடலை நீண்ட நேரமாக ஆம்புலன்ஸில் இருந்து வெளியில் எடுக்க முடியாமல் தவித்து வந்தனர். மேலும் அங்கு நிலவிய கூச்சல் குழப்பம் காரணமாக சற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த நிலையில் ஆம்புலன்ஸில் அமர்ந்திருந்த ராதிகா கண்ணீர் மல்க வெளியே வந்து செய்தியாளர்களிடம் சற்று விலகிச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

45
டிஆர்பி-க்காக இப்படி செய்யாதீர்கள்
Image Credit : X

டிஆர்பி-க்காக இப்படி செய்யாதீர்கள்

அவர் பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும், அங்கு கூட்டம் கலையாத காரணத்தால் கோபமடைந்த அவர், “சினிமா எங்களுக்கு உயிர். ஆனால் மனித உயிர் என்பது வேறு. உங்களுக்கு டிஆர்பி வேண்டுமானால் நாங்கள் படத்தில் வேண்டுமானாலும் நடித்துக் கொடுக்கிறோம். தயவுசெய்து கொஞ்சம் பிரைவேசி கொடுங்கள்” என்று கதறினார். அவர் கூறியதைக் கேட்ட பின்னர் அங்கிருந்த கூட்டம் சற்று விலகிய நிலையில் பாக்யராஜின் உடல் இல்லத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மகன் சாந்தனு, மருமகள் கிருத்திகா உள்ளிட்டோர் கண்ணீர் மல்க வீட்டிற்குள் சென்ற காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தின.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Behind Talkies (@behindtalkies)

55
பொதுமக்கள் கோரிக்கை
Image Credit : facebook

பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் திரை பிரபலம் அல்லது அரசியல் பிரபலங்கள் காலமானால் அந்த நிகழ்வுகளை தொடர்ந்து ஒளிபரப்பு செய்வதற்காக பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடிக்கின்றன. இது குறித்து ஏற்கனவே தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் இனி துக்க வீடுகளில் மீடியாக்களுக்கு அனுமதியில்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் மீறி ஒளிபரப்பு செய்வதற்காக தொடர்ந்து இவ்வாறு சிலர் நடந்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களை சுற்றி உள்ளவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhagyaraj Net Worth : சினிமா மூலம் கோடிகளை குவித்த பாக்யராஜ்... அடேங்கப்பா அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Now Playing
Director Bhagyaraj Passed Away: குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்.. இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!
Recommended image3
Bhagyaraj: திருமணமான 2 ஆண்டுகளில் உயிரிழந்த பாக்யராஜின் முதல் மனைவி யார்? பலரும் அறியாத சோக கதை!
Related Stories
Recommended image1
Bhagyaraj Love Story : சினிமாவை மிஞ்சிய பாக்யராஜ் - பூர்ணிமா காதல் கதை... ரீல் ஜோடி; ரியல் ஜோடியானது எப்படி?
Recommended image2
Bhagyaraj Net Worth : சினிமா மூலம் கோடிகளை குவித்த பாக்யராஜ்... அடேங்கப்பா அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved