MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2; படக்குழு பதிவிட்ட போஸ்டர் வைரல்!

உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2; படக்குழு பதிவிட்ட போஸ்டர் வைரல்!

Pushpa 2 The Rule Trending Number 1 on OTT Platform : அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த புஷ்பா 2 படமான ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 07 2025, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2

உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 பிடித்து சாதனை படைத்த புஷ்பா 2

Pushpa 2 The Rule Trending Number 1 on OTT Platform : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2: தி ரூல். ஒருபுறம் இந்தப் படம் சாதனை படைத்தாலும் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதியுதவி அளித்தனர்.

24
அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படம்

அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படம்

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் படத்தின் வரவேற்புக்கு மட்டும் குறைவில்லை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்திய அளவில் ரூ.800 கோடி வசூல் குவித்த புஷ்பா 2 படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ரூ.1800 கோடி வரையில் வசூல் குவித்தது. இதன் மூலமாக 2024ல் அதிக வசூல் குவித்த வெற்றி படமாக புஷ்பா 2 படம் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த புஷ்பா படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரையில் வசூல் குவித்தது. ஆனால், அந்த படத்தின் வசூலை விட புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 4 மடங்க அதிகம் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வசூல் மழை பொழிந்த புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

34
ஓடிடியில் நம்பர் 1 புஷ்பா 2

ஓடிடியில் நம்பர் 1 புஷ்பா 2

இப்போது ஓடிடியிலும் புஷ்பா 2 சாதனையை படைத்திருக்கிறது. அதாவது, உலகளவில் ஓடிடியில் நம்பர் 1 இடம் பிடித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் புஷ்பா 2 படக்குழுவினர் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளனர். அதில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த பிறகும் உலகளவில் டிரெண்டிங்கில் புஷ்பா 2 படம் என்று பதிவிட்டுள்ளனர். திரையரங்கிற்கு வந்து இந்திய ரசிகர்களை கவர்ந்த புஷ்பா 2 இப்போது ஓடிடியில் வெளியானதன் மூலமாக சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் மூவி ஆர்வலர்களால் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

44
உலகளவில் நம்பர் 1 இடம் புஷ்பா 2

உலகளவில் நம்பர் 1 இடம் புஷ்பா 2

ந்தப் படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பெண் வேடமணிந்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதோடு அதே உடையில் ஆக்‌ஷன் காட்சியிலும் அசத்தியிருப்பார். படம் மட்டுமின்றி புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டது. பீலிங்ஸ் பாடல் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் ஆக உருவெடுத்தது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகபதி பாபு, சுனில், ஆடுகளம் நரைன், ஆதித்யா மேனன், மைம் கோபி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் 3ஆவது பாகம் வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved