- Home
- Cinema
- புஷ்பா 2 நியூ வெர்ஷன்! பக்கா ஸ்கெச் போட்டு மீண்டும் வசூலை அல்ல படக்குழு போட்ட புதிய திட்டம்!
புஷ்பா 2 நியூ வெர்ஷன்! பக்கா ஸ்கெச் போட்டு மீண்டும் வசூலை அல்ல படக்குழு போட்ட புதிய திட்டம்!
அல்லு அர்ஜுன் நடிப்பில், வெளியாகி வசூல் சாதனை செய்து வரும் 'புஷ்பா 2' படத்தின் புதிய வெர்ஷன் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Directo Sukumar Birthday
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியான நிலையில், இதுவரை சுமார் ரூ.1831 கோடி வசூலித்து. கூடிய விரைவில் ரூ.2000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், வசூல் குறைய துவங்கி விட்டது. எனவே தற்போது புதிய புஷ்பா 2 படத்தின் புதிய வெர்ஷன் 11-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
Pushpa 2 Movie
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இயக்குனர் சுகுமாரின் பிறந்தநாளை பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சியை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே புஷ்பா திரைப்படம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் திரையிடப்பட்டு வரும் இந்நிலையில், ஜனவரி 11-ஆம் தேதி முதல் 3 மணிநேரம் 35 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
Pushpa 2 new Version Release January 11th
அல்லு அர்ஜுன் ரசிகர்கள், இந்த கூடுதல் 20 நிமிட காட்சியை பார்க்க ஆர்வமாக உள்ள நிலையில்... மீண்டும் 'புஷ்பா 2' படத்தின் வசூல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் நெருக்கத்தில், புஷ்பா 2 படத்தில் இந்த 20 நிமிட காட்சியை படக்குழு பக்கா ஸ்கெட்ச் போட்டு இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Pushpa 2 new Version
அதே நேரம் ஏற்கனவே இப்படத்தில் சில காட்சிகள் ஈடுபட வில்லை என்றும்... போர் அடிப்பதாக ரசிகர்கள் கூறி வந்ததால், இந்த 20 நிமிட காட்சி சில விமர்சனங்களுக்கும் ஆளாகலாம் என்பதே திரைப்பட விமர்சகர்களின் கருத்து.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.