ஆன்லைனில் லீக்கான புஷ்பா 2! தாறுமாறாக டவுன்லோட் செய்யும் நெட்டிசன்ஸ்!
புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே திருட்டு தளங்களிலும் படம் கசிய ஆரம்பித்துவிட்டது. HD, 1080p மற்றும் 240p என பல குவாலிட்டியில் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.
Pushpa 2 Release
2021ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சியாக 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தயாராகியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் OTT வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Pushpa 2 OTT Release
புஷ்பா 2 படத்தின் ஸ்ட்ரீமிங் ரிலீசுக்கான அதிகாரப்பூர்வ தேதியை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தியேட்டரில் ஓடி முடித்த பிறகு நெட்ஃபிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pushpa 2 in Netflix
புஷ்பா ராஜ் கதாப்பாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது. புஷ்பா 2 படத்துக்கான OTT உரிமையை நெட்ஃபிக்ஸ் ரூ.270 கோடிக்கு பெற்றுள்ளது. டிஜிட்டல் உரிமைகளின் அடிப்படையில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படமும் உள்ளது.
Pushpa 2 Leaked
இதனிடையே படம் ரிலீஸ் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே திருட்டு தளங்களிலும் படம் கசிய ஆரம்பித்துவிட்டது. HD, 1080p மற்றும் 240p என பல குவாலிட்டியில் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃபிலிம்ஜில்லா, மூவிரூலெஸ், தமிழ்ராக்கர்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான டொரண்ட் தளங்களில் புஷ்பா 2 திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.
Pushpa 2 pirated download
திரைப்படங்களின் சட்டவிரோத விநியோகத்தை தடுக்கும் முயற்சிகள் இருந்தாலும், புஷ்பா 2 டவுன்லோட் அல்லது புஷ்பா 2 எச்டி டவுன்லோட் என்று கூகுளில் தேடும் ரசிகர்கள் திருட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படங்களை ஈசியாக பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். இதனால், சினிமா ரசிகர்கள் சட்டப்பூர்வமான முறையில் படத்தைப் பார்க்க வேண்டும் திரைத்துறையினர் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறார்கள்.
Pushpa 2 HD Free Download
அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் தனஞ்சயா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கவர்ச்சியான கதைக்களம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட திரைப்படம் புஷ்பா 2. இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் OTT ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும்.