Nayanthara : திருமணத்தை நடத்தி வச்ச புரோகிதர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த சம்பளம்... அடேங்கப்பா இவ்வளவா?
Nayanthara : நயன்தாராவின் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, கடந்த 2005-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து குறுகிய காலத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் பாப்புலர் ஹீரோயினாக உருவெடுத்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்ததனால் தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.
7 ஆண்டுகளாக நீடித்த இந்த காதல் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்தது. கடந்த ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டான் என்கிற நட்சத்திர ஹோட்டலில் விக்கி - நயன் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்து முறைப்படி நடந்த இவர்களது திருமணத்தை 5 புரோகிதர்கள் மந்திரம் ஓதி நடத்தி வைத்தனர்.
தற்போது விக்கி - நயன் ஜோடி ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்றுள்ளனர். இந்நிலையில், நயன்தாராவின் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு தொகையை சம்பளமாக பெற்றதில்லையாம். பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Maamanithan Review : ‘மாமனிதன்’ ஆக விஜய் சேதுபதி ஜெயித்தாரா? தோற்றாரா? - முழு விமர்சனம் இதோ