- Home
- Cinema
- பிரதீப் ரங்கநாதனின் அடுத்த சம்பவம் லோடிங்; 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த சம்பவம் லோடிங்; 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!
Love Insurance Kompany: பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Pradeep Ranganathan starrer Dragon:
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்:
இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'டிராகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதருக்கு ஜோடியாக, நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் , கயாடு லோஹர் ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர். சிறப்பு தோற்றத்தில் நடிகை இவானா நடித்திருந்தார்.
Dragon Movie Box office Collection:
ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை
ரூ. 32 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிசியாகி உள்ளார். அந்த வகையில் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்து வரும் திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இந்த படத்தை நடிகை நயன்தாரவின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
இது வில்லங்கமான கதையா இருக்கே! லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ஸ்டோரி இதுதானா?
Vignesh Shivan and Pradeep Ranganathan Movie:
விக்னேஷ் சிவன்:
அஜித்தை வைத்து இயக்க திட்டமிட்ட விக்னேஷ் சிவன், அவருக்கு கூறிய கதை லைகா மற்றும் அஜித்துக்கு போனதால், இந்த படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து, ஒரு படத்தை இயக்க திட்டமிட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து வந்ததால், இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பிரதீப் ரங்கநாதனிடம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' கதையை கூறி படத்தின் படப்பிடிப்பையும் துவங்கினார்.
Love Insurance Kompany:
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி':
இந்த திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, சில படங்களின் கதைகள் இப்போது எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படி பட்ட ஒரு கதைக்களம் தான் இது. இதை ஒரு வருடம் கழித்து இயக்கிக் கொள்ளலாம் என இருக்க முடியாது. அதன் காரணமாகவே பிடிப்பை துவங்கியதாக கூறினார். மேலும் நெருக்கடியான சூழலில் தான் இருந்தபோது, பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய கதை பிடித்து இருக்கிறது எனக் கூறி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கு கொண்டார். அவருக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.
பிரதீப்பை கோடீஸ்வரன் ஆக்கிய கோமாளி; அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Pradeep Ranganathan Movie:
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி
இதற்கு உன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, பிரதீப்புக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளார்.
Love Insurance Kompany Release date:
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் தேதி:
எஸ் ஜே சூர்யா வில்லன் ரோலில் நடிக்க, கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. கிட்டதட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படம், ஒரு டைம் டிராவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. Pradeep Ranganathan's next film 'L.I.K' - New update
அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் பண்ண படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், கூறிய குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.