கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய “பொன்னியின் செல்வன்”... ஷூட்டிங் குறித்து சுடச்சுட வெளியான தகவல்...!
First Published Jan 4, 2021, 5:35 PM IST
இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் உஷாரான மணிரத்னம் படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே டாப் ஸ்டார்கள் என்பதால் அவர்களுடைய வீடுகளுக்கே மருத்துவர்கள் குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்துள்ளாராம்.

கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, லால், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை போல் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?