சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
சோழர்களின் வரலாற்றை புனைவுகளோடு சொல்லியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதலே பல்வேறு விமர்சனங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது.
கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அக நக’ பாடல் முதல் பாடலாக வெளியிடப்பட்டது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடலை பாடியிருக்கிறார்.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இதனை அடுத்து, வீரா ராஜ வீர’ பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா மற்றும் ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொன்னியின் செல்வன் 2 படத்தின் ‘சிவோஹம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான இடத்தில் வருகிறது என்றும், மதுராந்தகன் அரசனாக பதவியேற்கும் போது சிவோஹம் பாடல் அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.