பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யாவின் அத்துமீறும் போட்டோ ஷூட்... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கொடுத்த அதிர்ச்சி!
சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் சட்டையில் காவ்யா நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்களின் மனதில் டாப் இடம் பிடித்து வருகின்றன. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தனி இடம் பிடித்துள்ளது.
மற்ற சீரியல்களைப் போல் போட்டி, பொறாமை, வஞ்சம், பழிவாங்கும் படலம் என்றெல்லாமல் இல்லாமல், கூட்டு குடும்பம், அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் என ஃபேமிலி டிராமாவாக இருப்பதால் இல்லத்தரசிகளின் நெம்பர் ஒன் விருப்பமாக உள்ளது.
இந்த தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட கதாபாத்திரமாக விளங்குவது முல்லை இருக்கிறது. இதில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சித்ராவிற்கு பிறகு யார் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்று அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா ஒப்பந்தமானார்.
அந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காவ்யா. அதனால் அவரை ரசிகர்கள் காவ்யா அறிவுமணி என்றுதான் அழைக்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காவ்யா தன்னுடைய போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் சட்டையில் காவ்யா நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளை நிற மெல்லிய சட்டையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டி இருப்பதால் “சித்து ஒரு போதும் இப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்த மாட்டாங்க... நீங்களும் பண்ணாதீங்க” என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Kaavya