பாண்டியன் ஸ்டோர் 'முல்லைக்கு' கல்யாண கலை வந்துடுச்சு..! மெருகேறிய அழகில் வளைத்து வளைத்து கொடுத்த போஸ்..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சித்ராவிற்கு விரைவில் திருமணம் அகவுள்ளது. ஒரு பக்கம் சீரியலில் இவர் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிடுவதில் அம்மணி ரொம்ப பிஸி.
தற்போது.... குறையாத அழகில் பாண்டியன் ஸ்டோர் முல்லை நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் சித்ராவிற்கு திருமணம் நடைபெற உள்ளது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சித்ரா, அவ்வப்போது தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி புடவை, நகைகள் என சகல விதமான விளம்பரங்களுக்கும் மாடலிங் செய்து வருகிறார். அந்த மாடலிங் போட்டோக்களையும் உடனுக்குடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அப்படி தற்போது மணமகள் ரிசாப்ஷன் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்
தான் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற நகைகள் அணிந்து பார்க்கவே அழகில் வசீகரிக்கிறார் அம்மணி
வழக்கம் போல் பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.