இவர் தான் ஓவியாவின் காதலரா..? பொங்கி வழியும் ரொமான்ஸ்... பொழியும் முத்தமழை..!
நடிகை ஓவியா ஓவர் நெருக்கமாக, முத்தமிடும் புகைப்படம், மற்றும் லவ் என்று ஹேஷ்டாக் செய்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.

யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மீது காதல் ஏற்பட்டு அவரையே சுற்றி சுற்றி வந்த ஓவியா, பின்னர்... அவர் காதல் இல்லை என்று விலகியதால், பிக்பாஸ் வீட்டில் இருந்தே வெளியேறினார்.
இந்த காதல் தோல்வியில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்த பிக்பாஸ் ஓவியா தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், புதிய காதலில் விழுந்துள்ளார்.
தன்னுடைய புதிய காதலூரன் அவ்வப்போது, நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர் பதிவிட்டு சில பதிவில் லவ் என ஹேஷ்டாக் பயன்படுத்தியுள்ளதால் இவர் தான், ஓவியாவின் புதிய காதலர் என்பது தெரிகிறது.
ஓவர் ரொமான்ஸில்... ஓவியா தன்னுனடய காதலருக்கு முத்த மழையும் பொழிந்துள்ளார்.