ரஜினி முதல் கமல் வரை..300 கோடி பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இடம்பிடித்த சூப்பர் ஹீரோஸ்..
உலகளவில் ரூ.300 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் என்பது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுவரை தென்னிந்திய சினிமாவில் வெறும் 8 நடிகர்களை மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் குறித்து பார்க்கலாம்.

baahubali
முதல் இடத்தில் நடிகர் பிரபாஸ் :
உலக சினிமாவை கலக்கிய பாகுபலி படத்தின் நடித்ததன் மூலம் பேன் இந்தியா ஹீரோவானார். பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் உலகளவில் 300 கோடி பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்தது. முதல் பாகம் கிட்டத்தட்ட ரூ.650 கோடிகளையும், இரண்டாம் பாகம் ரூ. 1,810 கோடிகளை குவித்து மாஸ் காட்டி இருந்தது. இதையடுத்து பிரபாஸ் நடித்த சாஹோ ரூ. 433 கோடியை வசூலித்தது.
2.O
2.0 மூலம் ரஜினிகாந்த் :
நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் மற்றுமொறு பிரமாண்ட இயக்குனரான ஷங்கருடன் கைகோர்த்த எந்திரன் நல்ல வரவேற்பை பெற்றது முதல் பாகத்தில் ரஜினி விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்திலும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாயகியாகவும் நடித்திருந்தனர். அனிமேசன்களால் மிரட்டி இருந்த இந்த படம் ரசிகர்களின் பேராதரவு பெற்றதை அடுத்து இரண்டாம் பாகமாக 2.0 உருவானது. முதல் பாகத்தை விட இது மிரட்டலாக இருந்தது. பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார், ஹாலிவுட் நாயகி எமி ஜாக்சன் உடன் பேன் வேர்ல்ட் மூவியாக வெளியான இது 800 கோடி வரை வசூல் செய்து உலக சினிமாவில் 300 கோடி பாக்ஸ் ஆஃபீசிஸ் ரஜினிக்கு இடம் பிடித்து கொடுத்தது.
bigil
பிகில் மூலம் விஜய் :
விஜய் - அட்லீ கூட்டணியில் இறுதியாக வெளிவந்த பிகில் பட்டையை கிளப்பி இருந்தது. மைக்கேல் ராயப்பனாக விஜய் இளமை துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். லேடி சூப்பர் ஸ்டார் நாயகியாக வந்த இதில் தந்தை மகனாக விஜய் இரட்டை வேடம் தரித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படம் இளைய சமூகத்தின் வரவேற்பை பெற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஏ.ஆர் ரகுமானின் இசை நெஞ்சங்களை அள்ளி சென்றது. இந்த படம் உலகளவில் ரூ.300 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
Pushpa: The Rise
புஷ்பா அல்லு அர்ஜுன் :
சமீபத்தில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்த புஷ்பா தி ரைஸ் படத்தில் அல்லு அர்ஜுன் மாறுபட்ட தோற்றத்தில் மிரட்டி இருந்தார். செம்மரம் கடத்தல்காரனை நாயகனாக மக்கள் மனதில் உட்கார வைத்து விட்டது புஷ்பா. இதில் நாயகனை விட நாயகிக்கு மவுசு அதிகரித்ததன் விளைவாக ரஷ்மிகா பன்மொழி படங்களிலும் தற்போது கமிட்டாகி வருகிறார். புஷ்பா படம் உலகளவில் ரூ.365 கோடியை வசூலாக பெற்றது.
RRR
ஆர் ஆர் ஆர் நாயகர்கள் என்.டி.ஆர்., ராம் சரண்:
சுகந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தில் அதிரடி பிரம்மாண்டத்தோடு கண் முன் நிறுத்தியது ஆர் ஆர் ஆர். ராஜமௌலியின் அடுத்த பிடாமண்ட படைப்பான இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் என இரு முக்கிய கதாநாயகர்கள் நடித்திருந்தனர். அதோடு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகர்களோடு பான் இந்திய படமாக வெளியான இது உலக ரசிகர்களை கவர்ந்து ரூ. 1,200 கோடியை வசூலாக பெற்று மாபெரும் சாதனையை படைத்தது.
K.G.F: Chapter 2
கேஜிஎப் நாயகன் யாஷ்:
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் அடுத்த பாகத்திற்கான வித்தை அன்றே ரசிகர்கள் மனதில் விதைத்து விட்டது. நான்கு ஆண்டு எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் கடந்த தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி மாஸ் காட்டியது. புஷ்பாவை போலவே இதுவும் ஒரு கொள்ளையனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உலகளவில் ரூ.1,250கோடிக்கு மேல் வசூல் செய்தது.
vikram
உலக நாயகன் கமலின் விக்ரம் :
தற்போதைய உலக ட்ரெண்டான விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பிரபல நட்சத்திரங்கள் ஜொலித்திருந்தன. மாஸ் எண்டெர்டெயின்மெண்டாக உருவான இந்த படம் கமலின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. கைதி, மாஸ்டர் மூலம் பிரபலமான லோகேஷ் விக்ரம் மூலம் முன்னணி இயக்குனராகிவிட்டார். கடந்த 3 தேதி வெளியான இந்த படம் குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த மூவியாக உலகளவில் இதுவரை ரூ. 315 கோடிக்கு மேல் வசூல் செய்து 300 கோடி பாக்ஸ் ஆபிசில் நுழைந்து விட்டது.