- Home
- Cinema
- தனுஷ் செம பிசி.. ஆனாலும் வெற்றி கொண்டாட்டத்தை மிஸ் பண்ணல - ஒன்றுகூடிய திருச்சிற்றம்பலம் மூவி டீம்!!
தனுஷ் செம பிசி.. ஆனாலும் வெற்றி கொண்டாட்டத்தை மிஸ் பண்ணல - ஒன்றுகூடிய திருச்சிற்றம்பலம் மூவி டீம்!!
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற திரைப்படம் தான் தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், மூத்த இயக்குனர் பாரதிராஜா, பிரபல மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அப்போவே கோடிகளில் வசூல்.. மாஸ் காட்டிய மக்கள் திலகமும், நடிகர் திலகமும் - என்னென்ன படங்கள் தெரியுமா?
அனிருத் இசையில் இந்த படத்தில் வெளியான பல பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பாக பறக்க பறக்க நினைக்கதே என்ற பாடலும் தாய்க்கிழவி பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய நிலையில் அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நேற்றோடு ஓராண்டு முடிவடைந்ததை முன்னிட்டு வெற்றி கொண்டாட்டத்தில் இந்த பட குழுவினர் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் தனது பிஸியான இந்த நேரத்திலும், இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நித்யா மேனன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். தற்பொழுது அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.