- Home
- Cinema
- தியேட்டரில் ரிலீஸ் ஆன வேகத்தில் OTTக்கு பார்சல் செய்யப்பட்ட நிவின் பாலியின் பேபி கேர்ள் - எப்போ ரிலீஸ்?
தியேட்டரில் ரிலீஸ் ஆன வேகத்தில் OTTக்கு பார்சல் செய்யப்பட்ட நிவின் பாலியின் பேபி கேர்ள் - எப்போ ரிலீஸ்?
சர்வம் மாயா படத்தின் வெற்றிக்கு பின்னர் நிவின் நடிப்பில் திரைக்கு வந்த பேபி கேர்ள் திரைப்படம் ரிலீஸ் ஆன 21 நாட்களில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Baby Girl OTT Release Date
சர்வம் மாயா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நிவின் பாலியின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பேபி கேர்ள்'. பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ஆனால், இரண்டு வாரங்களில் ரூ.4.55 கோடி மட்டுமே 'பேபி கேர்ள்' வசூலித்ததாக பிரபல வர்த்தக ஆய்வாளர்களான சாக்னில்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரிலீசாகி 21-வது நாளில் 'பேபி கேர்ள்' ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பேபி கேர்ள் ஓடிடி ரிலீஸ்
பிப்ரவரி 12 முதல் சோனி லிவ் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. சுரேஷ் கோபியை நாயகனாக வைத்து 'கருடன்' படத்தை இயக்கிய அருண் வர்மா தான் 'பேபி கேர்ள்' படத்தின் இயக்குனர். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பாபி - சஞ்சய் இரட்டையர்கள் தான் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்திற்காக பாபி-சஞ்சய் திரைக்கதை எழுதும் மூன்றாவது படம் இதுவாகும்.
நிவின் பாலியின் பேபி கேர்ள்
இப்படத்தில் லிஜோ மோல் நாயகியாக நடித்துள்ளார். சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது. மலையாளிகளின் விருப்பமான நட்சத்திரங்களான அஜீஸ் நெடுமங்காடு, அஸ்வந்த் லால், ஜாபர் இடுக்கி, மேஜர் ரவி, பிரேம் பிரகாஷ், நந்து, கிச்சு டெல்லஸ், ஸ்ரீஜித் ரவி, ஜோசுக்குட்டி, அதிதி ரவி, ஆல்ஃபி பணிக்காரன், மைதிலி நாயர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது.
பேபி கேர்ள் படக்குழு
படத்தின் ஒளிப்பதிவு ஃபயாஸ் சித்திக், படத்தொகுப்பு ஷைஜித் குமரன், இசை சாம் சி எஸ், இணை தயாரிப்பாளர் ஜஸ்டின் ஸ்டீபன், நிர்வாக தயாரிப்பாளர்கள் சந்தோஷ் கிருஷ்ணன், நவீன் பி தாமஸ், லைன் புரொடியூசர் அகில் யசோதரன், கலை இயக்கம் அனீஸ் நாடோடி, ஆடை வடிவமைப்பு மெல்வி ஜே, ஒப்பனை ரஷீத் அகமது, சண்டைக்காட்சி விக்கி, சவுண்ட் மிக்ஸ் ஃபசல் ஏ பெக்கர், சவுண்ட் டிசைன் சிங்க் சினிமா, சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் காயத்ரி எஸ் என மிகப்பெரிய தொழில்நுட்ப குழுவே இப்படத்தில் பணியாற்றி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

