கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிவேதா தாமஸ் வெளியிட்ட படுக்கையறை புகைப்படம்!
'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும், 'பாபநாசம்' படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்த பிரபல நடிகை நிவேதா தாமஸ், தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஜெய்க்கு ஜோடியாக, 'நவீத்தை சரஸ்வதி' சபதம் படத்தில் நடித்த நிவேதா தாமஸுக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தொடர்ந்து தமிழில், தன்னை நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறார்.
விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி, ரஜினி மற்றும் கமலுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்புகளே இவர் கதவை தட்டியது. எனவே முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் மட்டும் தமிழுக்கு ஓகே சொல்லும் நிவேதா, அதிகப்படியாக தெலுங்கில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.
திரையுலகில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு... வீட்டில் தனிமை படுத்திகொண்டு இருப்பதாக தெரிவித்த நிவேதா தாமஸ் தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார்.
பெட்டில் சிரித்தபடி படுத்திருக்கும் நிவேதா ஒவ்வொரு நாளும் வந்து போகிறது, நான் நலமாக இருக்கிறன் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலர் விரைவில் நிவேதா தாமஸ் நலம் பெற வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.