செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!
பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு வளைகாப்பு நடந்துள்ள தகவலை, புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.
திரைப்படங்களில் நடித்தால் தான் பிரபலம் என்று, ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நிலையில், சமீப காலமாக... சீரியல் நடிகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள், மற்றும் சமூக வலைத்தளம் மூலம் பிரபலமானவர்கள் அனைவருமே வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக தான் பார்க்க படுகிறார்கள்.
இப்படி பிரபலமான பலருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி சேகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் கடந்த ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலரும், ' இதயத்தை திருடாதே' சீரியல் புகழ் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி, கடந்த வாரம் கர்ப்பமாக இருக்கும் தகவலை க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தார்.
இதை தொடர்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.பட்டு புடவையில், அழகிய படைகளுடன், கணவருடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.
இந்த புகைப்படங்களுடன்... தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக 'உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்' கதையோடு தன்னுடைய காதல் கணவரை பற்றி கூறியுள்ளார் கண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.