என்னா ஒரு வெறித்தனம்?.... விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த காதலி ஜூவாலா... வைரல் போட்டோ...!
இந்நிலையில் விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிடும் போட்டோ ஒன்றை ஜூவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான ராட்சசன் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் அதை தானே தயாரித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.
இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.
காதல் குறித்து முதலில் மனம் திறந்த ஜூவாலா கட்டா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். சமீபத்தில் கூட ஜூவாலாவிற்கு மோதிரம் அணிவித்து நிச்சயம் செய்தார் விஷ்ணு விஷால்.
ஜூவாலா கட்டா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். லாக்டவுன் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூவாலாவை பார்க்க விஷ்ணு விஷால் ஐதராபாத் பறக்கிறார், ஜூவாலாவும் அவ்வப்போது சென்னை வந்து செல்கிறார்.
இந்நிலையில் விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிடும் போட்டோ ஒன்றை ஜூவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் சூப்பர் ஜோடி என வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் என்னா ஒரு வெறித்தனம் என வடிவேல் பாணியில் காமெடியாக கிண்டலடித்துள்ளனர்.